கள்ளிமலர்

A tale of a cactus flower..

Sunday, November 21, 2010

மக்களை தாக்கும் "காக்கித்" தலைவனே!

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் போலீசாரால் அடித்து கொல்லப்பட்டதாக கூறி பெரியகுளத்தில் ரோடு மறியலில் ஈடுபட்ட பெண்களை தேனி ஏ.டி.எஸ்.பி., சாமிதுரைவேலு கலைந்து போகுமாறு கூறி தாக்கினார். - தினமலர் செய்தி

நீதியை கேட்டு வீதியில் திரண்ட
மக்களை தாக்கும் "காக்கித்" தலைவனே 
வெறிகொண்ட நாயாய் சீரும் முன்னே,
நடந்த சம்பவங்களை எண்ணிப்பார்.

சீதை என்றொரு பெண்ணை ராவணன் 
துன்புறுத்தினான் அன்று, அதனால் 
இலங்கை என்னும் தேசம் நருப்பில்
எரிந்து சாம்பலாய் போனது.

கண்ணகி என்றொரு பெண்மணிக்கு  
மன்னனாம் மதுரையின் அரசன்
தவறான தீர்ப்பளித்தான், அதன் விளைவு 
மதுரை மாநகர், எரிந்து சாம்பலானது

இன்று நீதிகேட்டு வந்த பெண்களை
தாக்கும் "காக்கியே" நாளை நெருப்பில்
எரியப்போவது உன் வீடாகலாம்.
நினைவில் கொள்க. நிதானம் கொள்க.

இப்படிக்கு
மக்களின்...மனசாட்சி