கள்ளிமலர்

A tale of a cactus flower..

Sunday, August 15, 2010

கடவுள் மறுப்பு கழகம்?


அன்பான வாசக நெஞ்சங்களே! நேரத்தை ஒதுக்கி இந்த இணைய தளத்திற்கு வருகை புரிந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது நன்றி கலந்த வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று பலர் கடவுள் மறுப்புக் கொள்கையை கையில் எடுத்துக் கொண்டு, ஏதோ அவர்கள் தான் பெரியார் அவர்களின் பேரன் என்று சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். இவர்களையெல்லாம் நீங்களும் பார்த்திருப்பீர்கள், படித்திருப்பீர்கள். "இளமறி பயமறியாது" என்பதற்கேற்ப இவர்கள் இன்று தீவிர கடவுள் மறுப்புக் கொள்கையில் முழங்கினாலும், வயதாக வயதாக இவர்கள் எப்படி மாறுவார்கள் என்பதற்கு பல உதாரணங்களை நாம் இதுவரை கண்டு வந்துள்ளோம். அவைகளில் சிலவற்றை இன்றைய தலைமுறை வாசகர்களுக்கு கீழே கொடுத்துள்ளேன்.

பெரியாரின் வழிவந்த ...
அண்ணாதுரை அவர்கள் - ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றார்
புரட்சிதலைவர் அவர்கள் - மூகாம்பிகையின் தீவிர பக்தர் என்பது உலகறிந்தது.
M .R . ராதா அவர்கள் - கடைசிக் காலத்தில் முருக பக்தரானார்
கருணாநிதி அவர்கள் - மஞ்சள் துண்டு மகேசனானார் (அவர் மனைவியார் அவர்கள் சாய்பாபா என்ற சாமியாரின் காலில் விழுந்து வணங்கிய காட்சியை நாடறியும்)
இயக்குனர் மணிவண்ணன் அவர்கள் - சீரடி சாய்பாபா பக்தராகி விட்டார்
பெரியார்தாசன் அவர்கள் - பெயரை அப்துல்லா என மாற்றி  அண்மையில்  இஸ்லாம்  மதத்திற்கு மாறிவிட்டார்.

இப்படி எத்தனையோ எடுத்துக்காட்டுகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இப்படி ஆர்வக் கோளாறில் இன்று எத்தனையோ பேர் தங்களை கடவுள் மறுப்பாளர்கள் என்று சொல்லிக்கொண்டு கிளம்பியிருக்கிறார்கள். இவர்களையெல்லாம்  நினைத்து எழுதிய சில கற்பனை வரிகள்...

கடவுள் மறுப்பு கழகம்?

நல்ல நாள் குறித்தார்கள்
நகரில் சிறந்த ஓதுவரை
அழைத்துவந்து, அவர்கையால்
பூசை செய்யச்சொன்னார்கள்

கடவுளை நினைத்து நல்ல
கடப்பாரை கொண்டங்கே
பலத்தை கூட்டி, பாழும்
நிலத்தை தோண்டலானார்

வானம் தோண்டியதில்
வடிவான கட்டிடத்தை
பூமித் தாயை வணங்கி
புவிதன்னில் கட்டினார்

தலைவாசல் நிலைவைக்க
தலைசிறந்த ஓதுவரை
தவமாய் தவம் கிடந்தது
தாங்கி அழைத்து வந்தார்.

வடிவான கட்டிடத்தை
வானுயரக் கட்டினார்கள்
பொலிவான கட்டிடத்தை
பூட்டியே வைத்திருந்தார்

நல்ல நாள் கிடைக்காமல்
நான்குமாதம் சென்றொருநாள்
திறப்புவிழா தேதி தன்னை
தேடிப்பார்த்து குறித்தார்கள்

திறப்பு விழா அழைப்பிதழில்
குங்குமத்தை தடவியவர்கள்
பொறுப்புடனே எடுத்துப்போய்
தலைவரிடம் கொடுத்தார்கள்

படித்துப்பார்த்த  தலைவரும்
பதற்றமின்றி  சொன்னார்
ராகு காலம் முடிந்ததும்
விழாவிற்கு வருவதாக

விழாநாளின் காலையில்
விரைந்திட்டார்  தொண்டர்கள்
தலைவர் வரும் பாதையில்
தவம்கிடந்தார் வெய்யிலிலே

ராகுகாலம் முடிந்த வேளை
ரதம் ஒன்றில் தலைவர் வர
தொண்டர்களின் கோஷமங்கே
தொலைதூரம் கேட்டது பார்.

ரதம் விட்டு இறங்கியவர்
விரைந்திட்டார் கட்டிடத்தை
காத்திருந்த புரோகிதரிடம்
நல்லநேரம் கேட்டறிந்தார்

நல்லநேரம் வரும்வரைக்கும்
நாற்காலியில் அமர்ந்தவர்
நாற்காட்டியில் குறித்திருந்த
ராசிபலன் படிக்கலானார்

காத்திருந்து  நல்ல நேரத்தில்
கட்டிடத்தை திறந்துவைத்தார்
வாழ்த்திய அனைவருக்கும்
வழங்கினார்கள் பிரியாணி.

திறக்கப்பட்ட கட்டிடமோ
திரு திருவென முழித்தது
எழுதி வைத்த தன் பெயரை
எழுத்து கூட்டி படித்தது

பெயர்ப் பலகை சிரித்ததை
பெரிதாய் எண்ணாமல்
படித்தது கட்டிடம். "கடவுள்
மறுப்பு கழகம்" தலைமையகம்.

அன்புடன்
பாலா வானுமாமலை

6 Comments:

Blogger subra said...

கவிதை பிரமாதம் ,வாழ்த்துக்கள் .அனால் கடவுள் இல்லை
என்பதுமட்டும் உண்மை.

August 15, 2010 at 7:06 PM  
Blogger singam said...

உங்கள் கருத்துப் பதிவிற்கு மிக்க நன்றி. அன்புடன் பாலா வானுமாமலை

August 15, 2010 at 8:12 PM  
Blogger kamal said...

சரி நாங்கள்தான் கடவுள் இல்லை இல்லை என்கிறோம் உங்களிடம் அது இருந்தால் கொஞ்சம் காண்பியுங்களே pls.

August 18, 2010 at 10:48 PM  
Blogger kamal said...

உங்கள் கவிதை மிக அருமை ஆனால் கவிதையில் உள்ள நிகழ்வுகளை பார்த்தல் எவ்வளவு நேரங்களை வீணடித்திருக்கிறார் இந்த மட வீட்டு முதலாளி
காலம் பொன் போன்றது கடமை கண் போன்றது காலத்தை கோவிலில் வெட்டியாக கழிக்காதே

August 18, 2010 at 11:01 PM  
Anonymous Anonymous said...

கடவுள் உண்டோ இல்லையோ ! மனிதனுக்கு மனிதம் இல்லாமல் போய்விட்டது, இதற்கு மதங்களும் ஒரு காரணம், ஆசை இன்னொரு காரணம்............ . . இரண்டையும் உதற நம்மால் முடியுமா? ஒன்றை விட்டாலும் இன்னொன்று வந்துக் கொண்டே இருக்கும்............

December 22, 2010 at 9:02 AM  
Blogger Sathik Ali said...

அருமையான் பதிவு.
கடவுள் இப்போது சூரியனுக்குள் தங்கி ஓய்வெடுத்து கொணடிருப்பதாக அறிகிறேன்.இல்லையென்று சொல்பவர்களும் பார்க்க வேண்டுமென்று விரும்புபவர்களும் சூரியன் உச்சியில் இருக்கும் போது உற்று பார்த்தே உணர்ந்து கொள்ளலாம்.:-)
~----
நண்பர்களே கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று முடிவுக்கு வரும் கடவுள் என்று எதை குறிப்பிடுகிறோம் என்ற முடிவுக்கு வர வேண்டும்.கடவுள் இல்லை என்று சொல்பவர்களும் காண்பிக்கக் கோருபவர்களும் தங்கள் புலன்களால் உணரக்கூடிய ஒன்றையே கடவுளாக எதிர்பார்க்கிறார்கள்,இன்னும் நம்மால் அறிய முடியாத உணர முடியாத எவ்வளவோ விஷயங்கள் இருக்கிறது உணர உணர எல்லா நாத்திகர்களும் இல்லை என்பதை உறுதிப்படுத்த முடியாமல் இருக்கிறது என நம்பிக்கை கொள்ளத்தொடங்கி விடுகிறார்கள்.அறியாத ஒன்றை இருக்கிறது என்பது மூட நம்பிக்கை அல்லது நம்பிக்கை என்றால் இல்லை என்பது மூடநம்பிக்கை மட்டுமே

December 22, 2010 at 10:01 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home